/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாறுகால் மூடி இல்லாததால் விபத்து அபாயம்
/
வாறுகால் மூடி இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : ஆக 01, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் தெருக்களில் வாறுகால் மூடி இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.
நகராட்சியில் தரமற்ற வாறுகால் மூடி அமைப்பதால் விரைவில் சேதமடைகிறது.
17வது வார்டு ஜின்னா தெரு செல்லும் வழியில் வாறுகாலின் மீது மூடி அமைக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளது.
வாறுகாலின் மீது தரமற்ற சிமென்ட் ஸ்லாப்புகள் அமைக்கப்பட்டு பெயரளவில் கட்டப்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகத்தினர் தரமில்லாத பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.