/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் மூடப்படாத குழிகளால் விபத்து அபாயம்
/
முதுகுளத்துாரில் மூடப்படாத குழிகளால் விபத்து அபாயம்
முதுகுளத்துாரில் மூடப்படாத குழிகளால் விபத்து அபாயம்
முதுகுளத்துாரில் மூடப்படாத குழிகளால் விபத்து அபாயம்
ADDED : செப் 09, 2024 04:36 AM

முதுகுளத்துார் முதுகுளத்துார் ஜல் ஜீவன் திட்டத்தில் தெருக்களில் தோண்டப்பட்டுள்ள குழிகள் மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இரவில் விபத்து அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் ஜல்ஜீவன் திட்டத்தில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடக்கிறது.
கடலாடி ரோடு பகுதியில் சில நாட்களுக்கு முன் வீடுகளுக்கு முன்பு மணல் அள்ளும் இயந்திரத்தை பயன்படுத்தி குழாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இவ்வழியே செல்லும் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தப்படும் குழாய்யும் சேதப்படுத்தியுள்ளனர்.
சிலஇடங்களில் தோண்டிய குழிகள் மூடப்படாமல் விட்டுள்ளதால் பள்ளமாக உள்ளது. வீடுகளில் இருந்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
சிலசமயங்களில் சிறுவர்கள் குழியில் விழுந்து காயப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை கூறியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்களின் நலன்கருதி முறையாக குழாய் அமைத்தும், தோண்டிய குழிகள் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.