/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறந்த நிலையில் கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

ADDED : ஏப் 06, 2024 04:04 AM

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலத்தில் பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையில் மணல்,செங்கல் கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருவதால், டூவீலரில் செல்பவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து செங்கல், எம்.சாண்ட், மணல், ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் லாரிகள், டிராக்டர்கள் மூலம் பணிகள் நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். இவற்றை திறந்த நிலையில் கொண்டு செல்லும்போது, கட்டுமான பொருள்கள் காற்றில் பறப்பதால், பின்னால் செல்லும் டூ வீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
டூ வீலரில் செல்பவர்கள் மீது ஹெல்மெட் வழக்கு பதிவு செய்வதில் ஆர்வம் செலுத்தும் போலீசார், இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் டிராக்டர் மற்றும் கனரக வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலும், டிராக்டர்களின் ட்ரெய்லர்களில் பதிவு எண் எழுதப்படாத நிலையில், ஏராளமான டிராக்டர் வலம் வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலவலர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.