/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்துள்ள கீழக்கரை கிழக்கு கடற்கரை ரோடு; நடுவில் விரிசலால் விபத்து அபாயம்
/
சேதமடைந்துள்ள கீழக்கரை கிழக்கு கடற்கரை ரோடு; நடுவில் விரிசலால் விபத்து அபாயம்
சேதமடைந்துள்ள கீழக்கரை கிழக்கு கடற்கரை ரோடு; நடுவில் விரிசலால் விபத்து அபாயம்
சேதமடைந்துள்ள கீழக்கரை கிழக்கு கடற்கரை ரோடு; நடுவில் விரிசலால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 19, 2024 11:57 PM
கீழக்கரை : ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை வரை 17 கி.மீ., ரோட்டில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
கடந்த 2010ல் கிழக்கு கடற்கரை ரோடு ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை, சிக்கல், மேலச்செல்வனுார், சாயல்குடி வழியாக துாத்துக்குடி வரை புதிதாக இருவழிச் சாலை அமைக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை ரோடு அமைக்கப்பட்ட பிறகு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் பிரதான சாலையாக விளங்குகிறது. வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக கிராமங்கள் மற்றும் நகரங்கள் மாறி வருகிறது.
கிழக்கு கடற்கரை ரோட்டில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் ரோடு தற்போது பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இரவு நேரங்களில் சேதமடைந்த ரோட்டில் வரும் டூவீலர் ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். ரோட்டோரங்களில் பெருவாரியாக முட்புதர்கள் அகற்றப்படாததால் ஒதுங்கி செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கடற்கரை ரோட்டின் இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டு வளர்க்கும் திட்டம் துவக்கப்பட்டது.
அவற்றை ஆக்கிரமிப்பாளர்கள் சேதப்படுத்தியதால் பெருவாரியான மரங்கள் வளராமல் போனது. எனவே வளர்ந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தார் ரோட்டை சீரமைப்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது.
எனவே ரோட்டை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.