/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
ADDED : ஆக 08, 2024 04:30 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதால்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.154.84 கோடியில் 500 படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், தீவிர சிகிச்சை பிரிவு, அவரச சிகிச்சை பிரிவு என பல்வேறு வசதிகளுடன் புதிய கட்டடத்தை 2023 ஆக.9ல் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த கட்டடம் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வருகிறது. 5 தளங்களிலும் மழை பெய்தால் ஜன்னல் வழியாக மழை நீர் வார்டுகளுக்குள் புகுந்தது.
நோயாளிகள் சிகச்சை பெற முடியாத நிலை இருந்தது. இதனை பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவினர் சரி செய்தனர்.
எக்ஸ்ரே மையம் அமைக்கும் கீழ் தளத்தில் கான்கிரீட் கூரை பகுதியில் கழிவு நீர் ஒழுகி அந்த அறைமுவதும் தேங்கியது. இதனை சரி செய்ய முடியாத நிலையில் பொதுப்பணித்துறையினர் உள்ளனர்.
இதனால் எக்ஸ்ரே பிரிவு பழைய கட்டடத்தில் தான் இன்னும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிய கட்டடத்தில் முதல் தளத்தில் உள்ள ரத்த பரிசோதனை கூடத்தின் முன் பகுதியில் கழிவு நீர் வெளியறே வழியின்றி தேங்கியுள்ளது.
இதனால் பரிசோதனை கூடத்திற்கு வரும் நோயாளிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டடத்தில் கழிவு நீர் தேங்குவதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.