ADDED : ஜூன் 07, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தில் இருந்து பிள்ளையார் குளம் செல்லும் 5 கி.மீ.,ரோடு சேதமடைந்துள்ளது.
இந்த ரோடு அமைத்து 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே கிராம மக்களின் நலன் கருதி போக்குவரத்திற்கு வசதி இல்லாத நிலையில் புதிய தார் ரோடு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.