/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கள்ளிக்குடி ரோட்டில் மண்ணரிப்பு; வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் கள்ளிக்குடி ரோட்டில் மண் அரிப்பு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

ADDED : செப் 18, 2024 04:53 AM

ஆர்.எஸ்.மங்கலம் : கலங்காப்புளி விலக்கில் இருந்து அழியாதான்மொழி, பேரவயல், கள்ளிக்குடி வழியாக திருவெற்றியூர் செல்லும் ரோட்டோரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் ரோடு, கலங்காப்புளி விலக்கில் இருந்து வெட்டுக்குளம், பேரவயல், அழியாதான் மொழி, கள்ளிக்குடி விலக்கு வழியாக திருவெற்றியூர் மற்றும் திருவாடானை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
இந்த ரோட்டால் அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். இந்நிலையில் பேரவயல், கள்ளிக்குடி விலக்கு ரோடு உட்பட ரோட்டின் பல பகுதிகளில் இருபுறமும் மண்ணரிப்பு ஏற்பட்டு ரோடு சேதமடைந்து குறுகி வருகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் பஸ் மற்றும் கனரக ஓட்டுனர்கள் எதிர்வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டில் இருபுறமும் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.