
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம்- தேவகோட்டை ரோட்டில் சின்னக்கீரமங்கலம் துணை மின்நிலையம் அருகே ரோடு சேதமடைந்திருந்தது. டூவீலர்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைந்தனர்.
இந்த ரோடு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியாக உள்ளதால் போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆகவே ரோட்டை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை சீரமைத்தனர்.