/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பள்ளியில் ரோபோடிக் கண்காட்சி
/
பரமக்குடி பள்ளியில் ரோபோடிக் கண்காட்சி
ADDED : பிப் 24, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : - பரமக்குடி புதுநகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் ரோபோடிக் கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைவர் முகைதீன் முஸாபர் அலி தலைமை வகித்தார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ரவி கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் தானியங்கி தீயணைக்கும் ரோபோ, ரயில் விபத்தை தடுக்கும் இயந்திரம், நவீன விவசாய கருவிகள், பேசும் ரோபோ, செயற்கைக்கோள் இயந்திரங்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் அது குறித்து விளக்கம் தெரிவித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.

