ADDED : ஜூலை 12, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அருகே செய்யாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட போதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் ரோபோடிக்ஸ் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தாளாளர் விஜயன் தலைமை வகித்தார்.
மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் நாகேந்திர குமார் பங்கேற்று மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் குறித்த பல்வேறு கருத்துக்களை உரிய விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி காட்டினார். பள்ளி முதல்வர் ஜெயந்தி வரவேற்றார்.
ஏற்பாடுகளை பள்ளியின் இயக்குனர் அகிலன் செய்திருந்தார். ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.