/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் ரோட்டோரம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
/
சாயல்குடியில் ரோட்டோரம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
ADDED : மே 04, 2024 04:55 AM
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பகுதிகள் மற்றும் நகரின் நான்கு பிரதான ரோடுகளிலும் ரோட்டோர ஆக்கிரமிப்மிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
ஆக்கிரமிப்புகளால் சாயல்குடி நகர் பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று காலை 10:30 மணிக்கு கடலாடி தாசில்தார் ரெங்கராஜ் மற்றும் சாயல்குடி பேரூராட்சி முதுநிலை உதவியாளர் முத்துராமலிங்கம், நெடுஞ்சாலைத் துறையினர், சாயல்குடி போலீசார் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மே 7ல் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுவதாக உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.