/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்ணார்பட்டியில் ரவுண்டானா நெடுஞ்சாலைத்துறையினர் திட்டம்
/
கண்ணார்பட்டியில் ரவுண்டானா நெடுஞ்சாலைத்துறையினர் திட்டம்
கண்ணார்பட்டியில் ரவுண்டானா நெடுஞ்சாலைத்துறையினர் திட்டம்
கண்ணார்பட்டியில் ரவுண்டானா நெடுஞ்சாலைத்துறையினர் திட்டம்
ADDED : செப் 12, 2024 04:27 AM
கமுதி: கமுதி கண்ணார்பட்டி மும்முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கமுதி கண்ணார்பட்டி அருகே கமுதி- அருப்புக்கோட்டை, திருச்சுழி மும்முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2.20 கோடியில் புதிதாக ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் கூறியதாவது:
கமுதி கண்ணார்பட்டியில் ரவுண்டானா அமைப்பதற்காக ரூ.2.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு புதிதாக அகலமான பாலம், ரோடு அமைக்கவும், தடுப்புச்சுவர், மையக்கோடுகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள், எச்சரிக்கை பலகைகள், வழிகாட்டு பலகைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளுடன்புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோடு அமைப்பதற்காக அளவீடு செய்யும் பணி தற்போது நடக்கிறது. பணிகள்துவங்கி 6 மாதத்தில் முடிக்கப்படும் என்றார். ஆய்வின் போது இளநிலை பொறியாளர் முருகன் உட்பட பணியாளர்கள் பலர் இருந்தனர்.

