/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.20 லட்சம் மோசடி: நில புரோக்கர் கைது
/
ரூ.20 லட்சம் மோசடி: நில புரோக்கர் கைது
ADDED : ஆக 14, 2024 01:14 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நிலம் வாங்கித்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் திரவுபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ஞானலட்சுமி 61. இவருக்கு ஓம்சக்தி நகர் 9வது தெருவை சேர்ந்த நில புரோக்கர் ஷாஜகான் 51, பட்டணம்காத்தான் பகுதியில் 12 சென்ட் நிலம் குறைந்த விலையில் வாங்கித்தருவதாக ரூ.25 லட்சம் அக்ரிமெண்ட் எழுதிக் கொடுத்துள்ளார்.
இதற்காக ஞானலட்சுமியிடம் பல தவணைகளாக ரூ.20 லட்சம் பெற்றவர் நிலத்தை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஷாஜகானை கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் வைத்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.-------