/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிரிக்கெட் மைதானமாக மாறியது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
/
கிரிக்கெட் மைதானமாக மாறியது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
கிரிக்கெட் மைதானமாக மாறியது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
கிரிக்கெட் மைதானமாக மாறியது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
ADDED : மே 16, 2024 06:29 AM
ஆர்.எஸ்.மங்கலம்: வறட்சியால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீர் வற்றியதால் கண்மாய் உட்பகுதி தற்போது நீரின்றி கிரிக்கெட் மைதானமாக மாறியுள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இந்த கண்மாயில் தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாயில் ஜன.,ல் 4.5 அடி தண்ணீர் வரை தேங்கியது.
அதைத் தொடர்ந்து கண்மாயில் உள்ள நீரை பயன்படுத்தி விவசாயிகள் கோடை சாகுபடி மேற்கொண்டனர்.
கோடை சாகுபடிக்கு தண்ணீரை பயன்படுத்திய நிலையிலும் மார்ச் மாதம் கடைசி வாரம் வரை கண்மாயில் பாதி அளவு தண்ணீர் தேங்கி இருந்தது.
இந்நிலையில் அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சியால் கண்மாயில் தேங்கியிருந்த நீர் வேகமாக வற்றத் துவங்கியது. இந்நிலையில் தற்போது கண்மாயில் தாழ்வான பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் மற்ற பகுதிகளில் முற்றிலும் தண்ணீர் வற்றி கண்மாய் உட்பகுதி வறண்டுள்ளது.
கண்மாய் உட்பகுதி வறண்டு உள்ளதால் உட்பகுதியை சுத்தம் செய்து விளையாட்டு மைதானமாக இளைஞர்கள் மாற்றி தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.