/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா
/
ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா
ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா
ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா
ADDED : ஜூலை 31, 2024 06:02 AM

ஆர்.எஸ்.மங்கலம்,  :  ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அரசாள வந்த அம்மன் கோயில் 48ம் ஆண்டு பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. முக்கிய விழாவான பால்குடம் விழா நேற்று காலை 10:30 மணிக்கும், பூச்சொரிதல் விழா மாலை 6:30 மணிக்கும் நடந்தது.
முன்னதாக பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து பால்குடம் புறப்பாடு நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக பால் குடத்தை எடுத்துச் சென்ற பக்தர்கள் அரசாள வந்த அம்மன் கோயிலை அடைந்து பக்தர்கள் கொண்டு வந்த பால் குடத்தில் இருந்த பாலில் மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது.
சிவாச்சாரியார் மணிகண்டன் தலைமையில் நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6:30 மணிக்கு திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து தட்டில் பூக்கள் எடுத்துச் சென்ற பக்தர்கள் அரசாள வந்த அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
பின் தீபாராதனை நடந்தது. விழாவில் ஈஸ்வரி மெட்டல்ஸ் ஆனந்தன் குடும்பத்தார், ஹிந்து பேரவை தலைவர் கந்தசாமி, வட்டார காங்., தலைவர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் வைரவன், கருப்பாயி, விஜயன், சரண்யா, அனுராதா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மருது, உஷாராணி, முன்னாள் வி.ஏ.ஓ, ராஜபாண்டியன்.
கிருஷ்ணா ஜுவல்லரி உரிமையாளர்கள் ரத்னா, சசிகுமார், பத்திர எழுத்தர் சாத்தையா, பா.ஜ, ஒன்றிய பொருளாளர் பாண்டித்துரை, நாடார் மகாஜன சங்க ஆட்சி குழு உறுப்பினர் ரியல் எஸ்டேட் ராமநாதன், சன் இன்வெர்ட்டர் உரிமையாளர் காளிதாஸ், அ.தி.மு.க., ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் இலை மண்டி கார்மேகம், ஜெய் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் தியாகு, அசோக் பஜாஜ் உரிமையாளர் அசோக், தொழிலதிபர் அஜெய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

