ADDED : மார் 09, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு ஊரக வேளாண் அனுபவ பயிற்சி கமுதி கோட்டைமேடு சேதுசீமை இயற்கை விவசாயம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் நடந்தது.
தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நோக்கம், அதன் செயல்பாடு மற்றும் நன்மைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் பயன்கள், அதன் மூலம் ஏற்படும் லாபம் குறித்து விளக்கினர். உடன் முதன்மை செயல் அலுவலர் நித்தியா உட்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.