/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 03, 2024 05:28 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டஊராட்சி செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்டத்தலைவர் பி.டி.ஓ., ராஜேந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலக உதவியாளர்துர்கா மீது நிதி முறைகேடு தொடர்பாக மாவட்டபொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார்மனுவை திரும்ப பெற வேண்டும்.
மாவட்ட ஊராட்சிசெயலாளர் சந்தோஷத்தின் தன்னிச்சையான ஊழியர் விரோதபோக்கை கண்டித்தும். அவரை தற்காலிக பணி நீக்கம்செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாநில செயலாளர் சோமசுந்தரம், மாநில துணைத்தலைவர் செல்வகுமார், பொருளாளர் விஜயகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்னாள் மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.