/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : மார் 03, 2025 05:51 AM
பெரியபட்டினம் : பெரியபட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் திறந்த வெளியாகவே உள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு களிமண்குண்டு, தினைக்குளம், முத்துப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு புறநோளியாகவும் உள்நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
பிரசவ வார்டு உள்ளது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.
பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பு காம்பவுண்டு சுவர் இல்லாததால் விஷமிகள் அங்குள்ள கண்ணாடி ஜன்னல்களை சேதப்படுத்தி வைத்துள்ளனர்.
இதனால் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
புதிதாக கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட புறநோயாளிகள் பிரிவு சுகாதார கட்டடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. அதில் திட்ட மதிப்பீட்டு தொகை குறிப்பிடப்படவில்லை.
எனவே மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பாதுகாப்பு கருதி காம்பவுண்டு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.