/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாய்மர படகு போட்டி: நம்புதாளை முதலிடம்
/
பாய்மர படகு போட்டி: நம்புதாளை முதலிடம்
ADDED : மே 29, 2024 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, நம்புதாளை பாலமுருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, பாய்மரப்படகு போட்டி நடந்தது.
நம்புதாளை, தொண்டி போன்ற பல்வேறு ஊர்களை சேர்ந்த 26 படகுகள் போட்டியில் பங்கேற்றன. ஒரு படகில் ஆறு பேர் இருந்தனர். கடல் மைல் 10 கி.மீ., என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. வாண வேடிக்கையுடன் போட்டி துவங்கியது.
நம்புதாளை அம்பலம் படகு முதலிடம் பெற்று, 50,000 ரூபாய் பரிசுத்தொகை வென்றது. தொண்டி புதுக்குடி இளஞ்சியம் படகு இரண்டாம் இடம் பெற்று, 40,000 ரூபாய் பரிசுத்தொகையும், அதே ஊர் நடராஜன் படகு மூன்றாம் இடம் வந்து 30,000 ரூபாய் பரிசுத்தொகையும் வென்றன.