/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்திமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
/
சக்திமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
ADDED : ஜூன் 25, 2024 11:01 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம், சோழந்துார் அருகே கொத்தமங்கலம் கிழக்கு தெரு சக்தி மாரியம்மன் கோயில் மூன்றாம் ஆண்டு முளைப்பாரி விழாவை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
தொடர்ந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற பால்குடங்களால் மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக, வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.
விழாவை முன்னிட்டு பெண்கள் கும்மி ஆட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.