/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனைத்து அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை
/
அனைத்து அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை
ADDED : ஆக 08, 2024 10:42 PM
ராமநாதபுரம்: சுதந்திர தினமான ஆக.15ல் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுவதாக ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன்தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு அஞ்சல் துறை மூலம் 'இல்லம் தோறும் தேசியக்கொடி' என்ற சிறப்பு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது.
இதனை ஊக்கப்படுத்த ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல்அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி தேசியக்கொடியை வாங்கி 77வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி, தனியார்நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு மொத்தமாக கொடிகள் பெற்றுக்கொள்ள தபால் அலுவலக வணிக அதிகாரியை94431 39982 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.