/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் புகையிலை விற்பனை: ரூ.1 லட்சம் அபராதம்
/
ராமேஸ்வரத்தில் புகையிலை விற்பனை: ரூ.1 லட்சம் அபராதம்
ராமேஸ்வரத்தில் புகையிலை விற்பனை: ரூ.1 லட்சம் அபராதம்
ராமேஸ்வரத்தில் புகையிலை விற்பனை: ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 29, 2024 05:58 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தடை செய்த புகையிலை, குட்கா விற்ற கடை உரிமையாளர்கள் மூவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் குட்கா, புகையிலை விற்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால் கடைகளில் கள்ளத்தனமாக விற்கின்றனர்.
இதனை தடுக்க நேற்று ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உமாதேவி, உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், ராமேஸ்வரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் ராமேஸ்வரம் அம்பேத்கர் காலனி அருகில் பெரிய பள்ளிவாசல் தெரு, மேல ரதவீதியில் உள்ள 3 கடைகள் மற்றும் வீடுகளில் சோதனையிட்டனர்.
இதில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் தசரதன், காளீஸ்வரன், மைக்கேல் அந்தோணி ஜெகன் ஆகியோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

