/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செப்.7 ல் விநாயகர் சதுர்த்தி விழா களிமண் சிலைகள் விற்பனை
/
செப்.7 ல் விநாயகர் சதுர்த்தி விழா களிமண் சிலைகள் விற்பனை
செப்.7 ல் விநாயகர் சதுர்த்தி விழா களிமண் சிலைகள் விற்பனை
செப்.7 ல் விநாயகர் சதுர்த்தி விழா களிமண் சிலைகள் விற்பனை
ADDED : செப் 05, 2024 05:06 AM

ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ரூ.30 முதல் ரூ.2000 வரை பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட களிமண் விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிப்பட்டு அதன் பிறகு கிணறு, ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் (செப்.7) 2 நாட்களே உள்ளது. ராமநாதபுரம் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்தும் வழிபடும் வகையில் மதுரை, மானாமதுரையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்காத களிமண் சிலைகள், சுட்ட களிமண் சிலைகள் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
அரை அடி முதல் 5 அடி வரையில் விநாயகர் சிலைகள் ரூ.30 முதல் ரூ.2000 வரை விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.