ADDED : மே 24, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
தொண்டி:
தொண்டி அருகே பாண்டுகுடி பகுதியில் ஆற்று மணல் திருடுவதாக தகவல் கிடைத்தது.
தொண்டி எஸ்.ஐ. சிவசாமி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் மணல் அள்ளுவது தெரிந்தது. சரக்கு வாகனத்தை கைபற்றிய போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம் 27, கைது செய்தனர். தப்பி ஓடிய முத்துபாண்டியை தேடுகின்றனர்.
