/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடும்பம், வேலையில் போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும் சந்தீஷ் எஸ்.பி., அறிவுரை

ADDED : மார் 10, 2025 04:41 AM
திருவாடானை: குடும்ப வாழ்க்கை, போலீஸ் பணி இரண்டிலும் போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எஸ்.பி. சந்தீஷ் பேசினார்.
திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் பெண் போலீசார் சார்பில் மகளிர் தினவிழா நடந்தது. இதில் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: தமிழக காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் பெண் போலீசார் பங்கும் உள்ளது.
குடும்ப வாழ்க்கை, போலீஸ்துறை வாழ்க்கை இரண்டிலும் போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று பேசினார். அதனை தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடபட்டது. விழாவில் திருவாடானை டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, எஸ்.ஐ.க்கள் சித்ராதேவி, கலா மற்றும் பெண் போலீசார்கள் கலந்து கொண்டனர். பெண் போலீசார் புத்தாடை அணிந்து விழாவை கொண்டாடினர்.