ADDED : ஆக 23, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ரோடு கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றியும் விநாயகர் துதி பாடல்களை பாடியும் பஜனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மூலவர் வல்லபை விநாயகருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

