/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா
/
மருத்துவக்கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஜூன் 07, 2024 05:11 AM

ராமநாதபுரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நில மீட்பு, பாலை வனமாக்கல் மற்றும்வறட்சியை தாங்கும் தன்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் வழங்கினர்.
அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து உறுதிமொழி ஏற்றனர்.
மருத்துவக்கல்லுாரி டீன் டாக்டர் செந்தில் குமார், மருத்துவ கல்லுாரி கிரின் கமிட்டி கார்த்தி, விஷ்ணுபிரியன், சமூக ஆர்வலர் சுபாஷ் சீனிவாசன், பசுமை குடைகள் அமைப்பு சுரேஷ் ரூபன், பிரவின், நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் மேத்யு இம்மானுவேல் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.