/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு
/
முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு
ADDED : செப் 10, 2024 05:10 AM

ராமநாதபுரம்: சஷ்டியை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், பூஜை, வழிபாடு நடந்தது.
ராமநாதபுரம் குமரய்யா கோயிலில் பால், தயிர், சந்தனம், பழங்களால் வள்ளி, தெய்வானை, முருகருக்கு அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பொங்கல், புளியோதரை பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊருணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலதண்டயுத பாணி சுவாமி கோயில் ஆகிய இடங்களில் நடந்த சஷ்டி சிறப்பு பூஜையில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோயில்களில் ஆவணி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடினர்.