/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது
/
சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது
சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது
சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது
ADDED : ஜூலை 02, 2024 10:09 PM
ஆர்.எஸ்.மங்கலம்: இளையான்குடி அருகே சாத்தனுார் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுாரில் மகா சாத்தையனார் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு இன்று(ஜூலை 3) காலை 10:00 முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 16ல் முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. ஜூலை 1 ல் கணபதி ஹோமம் , வாஸ்து சாந்தி, கோ பூஜை நடந்தன. நேற்று நான்கு காலயாக சாலை பூஜைகள் நடந்தது. மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இன்று யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முகப்பு ராஜகோபுரம் மற்றும் கருவறை மூலஸ்தான கோபுரத்தில் காலை 10:00 முதல் 10:30 மணிக்குள் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
நேற்று நடந்த யாகசாலை பூஜையில் கோயில் அறங்காவலரும் சாத்தையா மில் ஸ்டோர் உரிமையாளருமான தர்மராஜன், என்.எஸ்.பி.குரூப் ஆப் கம்பெனி செல்வன் யாதவ், அறங்காவலர் குழு தலைவர் கிருத்திகா கபில் மனோஜ், அறங்காவலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.