
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்தார். முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு வார்டுகளில் 10க்கும் மேற்பட்ட பூத் ஏஜென்ட்கள் இருந்ததால் ஒரு கட்சிக்கு ஒரு பூத் ஏஜென்ட் தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஓட்டுச்சாவடிகளில் ஒரு கட்சியினருக்கு ஒரு பூத் ஏஜென்ட் தான் இருக்க வேண்டும். மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

