ADDED : ஏப் 16, 2024 03:56 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: -பரமக்குடி அருகே கச்சாத்தநல்லூர் அருள்சான்று அகாடமி பள்ளி முதலாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. மதுரை பிரால்கா குழுமத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார்.
அருள்சான்று சிறப்பு பள்ளியின் தாளாளர் ஜெரால்டு சேசுராஜ் முன்னிலை வகித்தார். தாளாளர் அகஸ்டின் ராஜ் வரவேற்றார். மதுக்கூர் ராமலிங்கம், தேவகோட்டை பூஜிதா உள்ளிட்டோர் பேசினர். டான்போஸ்கோ மெட்ரிக் பள்ளி முதல்வர் ஸ்டெல்லா, ரோஸ்லின் உள்ளிட்டோர் பங்கேற்று குழந்தைகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர். முதல்வர் ஸ்டீபன் சவரிராஜ் நன்றி கூறினார்.
