நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை பாபா மெட்ரிக்,நர்சரி பள்ளிகள் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். காங். நிர்வாகி ஏ.ஆர்.பி., முருகேசன், மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்.ஐ., மார்ட்டின், கனரா வங்கி மேலாளர் ரம்யா, தலைமை ஆசிரியர் புவனேஸ்வரன், தமிழாசிரியர் முருகேசன் பங்கேற்றனர்.
விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு, சான்று வழங்கினர். கலை நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் கபிலன், ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, முதல்வர் சாரதா, வைரம் அரிமா சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

