/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மேலாண்மைக்குழு மறு சீரமைப்பு கூட்டம்
/
பள்ளி மேலாண்மைக்குழு மறு சீரமைப்பு கூட்டம்
ADDED : ஆக 07, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு சீரமைப்பு கூட்டம் நடந்தது.
தலைமையாசிரியர் டேவிட் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
இதில் 156 பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத்தலைவர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் பள்ளி மேலாண்மைக்குழு மறு சீரமைப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) சுதாகர், பள்ளி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியை ஆசிரியர் மணிவண்ணன் தொகுத்து வழங்கினார். ஆசிரியை அலமேலு நன்றி கூறினார்.