/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் வசதியின்றி 5 கி.மீ., நடந்து சிரமப்படும் பள்ளி மாணவர்கள்
/
பஸ் வசதியின்றி 5 கி.மீ., நடந்து சிரமப்படும் பள்ளி மாணவர்கள்
பஸ் வசதியின்றி 5 கி.மீ., நடந்து சிரமப்படும் பள்ளி மாணவர்கள்
பஸ் வசதியின்றி 5 கி.மீ., நடந்து சிரமப்படும் பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 01, 2024 10:26 PM

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மேதலோடை, காடுகாவல்காரன் உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு பஸ் வசதியின்றி பள்ளி மாணவர்கள் தினமும் 5 கி.மீ., வரை நடந்து சென்று சிரமப்படுகின்றனர்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை, காடுகாவல்காரன், மாரிவலசை, கொட்டியக்காரன் வலசை, உத்தரவை, அய்யனார்புரம், குதக்கோட்டை உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த 500 மாணவர்கள் 5 கி.மீ.,ல் உள்ள வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.
இந்நிலையில் அரசு பஸ் வசதியின்றி மாணவர்கள் தினமும் பள்ளிக்கு 5 கி.மீ., நடந்து சென்று சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி தற்போது மேதலோடை வரும் அரசு பஸ்கள் பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் மேதலோடை தெற்கு, வடக்கு உள்ளிட்ட இடங்களில் இருந்து வண்ணாங்குண்டு வரை இயக்க வேண்டும். அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.