/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுட்டெரிக்கும் வெயில்: ராமேஸ்வரம் ரத வீதியில் டேங்கர் தண்ணீர் தெளிப்பு

ADDED : ஏப் 30, 2024 10:40 PM

ராமேஸ்வரம், - -சுட்டெரிக்கும் வெயிலுக்கு ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் நகராட்சி சார்பில் டேங்கர் லாரியில் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணித்தனர்.
கோடை வெயில் சுட்டெரிப்பதால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு காலணி இன்றி கோயில் ரத வீதியில் நடந்து வந்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
பின் கோயில் ரதவீதியில் நடந்து சென்று ஊருக்கு திரும்பி செல்கின்றனர். இதனால் வயதான பக்தர்கள், பெண்கள், சிறுவர்கள் பலரும் ரதவீதியில் ஒதுங்கி நிற்க நிழல் இன்றி வெப்பம் தாங்காமல் ஓடோடி செல்கின்றனர்.
இதனை தவிர்க்க ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் நாசர்கான், கமிஷனர் கண்ணன் ஏற்பாட்டில் நேற்று கோயில் நான்கு ரத வீதியில் லாரி மூலம் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணித்தனர். இதனால் பக்தர்கள் ரதவீதியில் சிரமமின்றி நடந்து சென்றனர்.