sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடல் அட்டை, கடல் குதிரை கடத்த முயன்றோருக்கு '3 ஆண்டு'

/

கடல் அட்டை, கடல் குதிரை கடத்த முயன்றோருக்கு '3 ஆண்டு'

கடல் அட்டை, கடல் குதிரை கடத்த முயன்றோருக்கு '3 ஆண்டு'

கடல் அட்டை, கடல் குதிரை கடத்த முயன்றோருக்கு '3 ஆண்டு'


ADDED : ஏப் 24, 2024 08:48 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையிலான போலீசார் தொண்டி பகுதியில் 2018 டிச.,28ல் ரோந்து சென்றனர். பழைய பஸ் ஸ்டாண்டில் சாக்கு பையுடன் நின்ற மணக்குடி அர்ச்சுனன், 40, மங்கலக்குடி ஜீவா, 25, ஆகியோரை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட 8 கிலோ கடல் அட்டை, 4 கிலோ கடல் குதிரையை கைப்பற்றினர்.

அவற்றை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அவர்களை திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அர்ச்சுனன், ஜீவாவுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பிரசாத் உத்தரவிட்டார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us