ADDED : மே 10, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி விதை நேர்த்தி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மதுரை வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி மாணவி கார்த்திகா மேலாய்க்குடியில் விதை நேர்த்தி குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். அப்போது விவசாயிகள் மத்தியில் விதை நேர்த்தி குறித்தும், அதன் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி விளக்கினார்.
தொடர்ந்து விதை நேர்த்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள், எவ்வாறு செயல்படுத்துவது என விளக்கினார். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டறிந்தனர்.