/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை உழவுக்கு பின் நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு விதைப்பு கருவி
/
கோடை உழவுக்கு பின் நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு விதைப்பு கருவி
கோடை உழவுக்கு பின் நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு விதைப்பு கருவி
கோடை உழவுக்கு பின் நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு விதைப்பு கருவி
ADDED : ஏப் 04, 2024 03:42 AM
பெருநாழி : -பெருநாழி அருகே பெரியமனக்குளத்தில் விவசாயி செய்யது இப்ராஹிம் நிலத்தில் வேளாண் மேலாண்மை முகமை திட்டத்தில் நெல்லுக்கு பின் கோடையில் நிலக்கடலை சாகுபடி விதைப்பு கருவி குறித்த செயல் விளக்கமளிக்கப்பட்டது.
கமுதி வேளாண் உதவி இயக்குனர் சிவராணி தலைமை வகித்தார். செயல் திட்ட விளக்கத்தை அட்மா திட்ட வட்டார மேலாளர் ஈஸ்வரி, உதவி மேலாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
வேளாண் இணை இயக்குனர் கண்ணையா பேசியதாவது:
நெல் சாகுபடியில் தன்னிறைவு அடைந்துஉள்ளோம். பயறு மற்றும்எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் பற்றாக்குறை உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து பயறு மற்றும் எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளது.
வளரும் மக்கள் தொகையை சமாளிப்பதற்கு நாம் உற்பத்தியை பெருக்க வேண்டும். விவசாயிகள் கோடையில் நிலக்கடலை, எள், பயறு வகை சாகுபடி செய்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றார்.
சின்ன மனக்குளம், முஷ்டக்குறிச்சி, உப்பங்குளம், பாக்குவெட்டி, கருங்குளம், நாராயணபுரம், நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதையும், மரக்கன்றுகள் நடப்பட்டதையும் வேளாண் துறையினர் ஆய்வு செய்தனர்.

