/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
/
2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
ADDED : ஜூலை 05, 2024 10:52 PM

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் மினி சரக்கு வாகனத்தில் கடத்தய 2000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் இருந்து மினி சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தேவிபட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனார், நுண் பிரிவு ஏட்டு இளையராஜா அப்பகுதியில் சென்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். இதில் 2000 கிலோ ரேஷன் அரிசியை வெளி மாவட்டங்களுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே முத்துப்பட்டினத்தை சேர்ந்த கண்ணன் 46, பொன்னமராவதி தாலுகா பொன்னம்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் 67, ஆகியோரை கைது செய்தனர்.