/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
/
இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
ADDED : ஜூன் 27, 2024 02:04 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா மற்றும் இந்திய, இலங்கை பணம் 60 ஆயிரத்தை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்தவர் உட்பட இருவரை கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் நேற்று தனியார் தங்கும் விடுதியில் தனிப்பிரிவு எஸ்.ஐ.,நல்லுசாமி, போலீசார் பாலமுரளி, சுரேஷ், ராமமூர்த்தி ஆகியோர் சோதனை செய்தனர். அங்கு இலங்கை கல்பெட்டியாவை சேர்ந்த அந்தோணி பிரதீபன் 35, என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்த இலங்கை பணம் 10 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரித்ததில் ஜூன் 1ல் இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளார்.
பின் இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக ராமேஸ்வரம் புதுரோடு பகுதியை சேர்ந்த உமையசெல்வம் 45, என்பவரை தொடர்பு கொண்டு கடத்தலுக்கு திட்டமிட்டனர். மேலும் ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளியை சேர்ந்த தியாகராஜன் 53, என்பவரிடம் மதுரையில் இருந்து கஞ்சா கடத்தி வர ரூ.70 ஆயிரம் கொடுத்ததாக விசாரணையில் தெரிவித்தனர்.
இதையடுத்து தியாகராஜன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா, உமயசெல்வத்திடம் ரூ. 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் பின் உமயசெல்வம், அந்தோணி பிரதீபனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தியாகராஜனுக்கு விபத்தில் கால்முறிவு ஏற்பட்டதால் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.