/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி கடலில் அனுமதியின்றி சென்ற அதிவேக படகு பறிமுதல்
/
தொண்டி கடலில் அனுமதியின்றி சென்ற அதிவேக படகு பறிமுதல்
தொண்டி கடலில் அனுமதியின்றி சென்ற அதிவேக படகு பறிமுதல்
தொண்டி கடலில் அனுமதியின்றி சென்ற அதிவேக படகு பறிமுதல்
ADDED : செப் 17, 2024 12:08 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் அனுமதி இல்லாமல் அதிவேகத்தில் படகை ஓட்டிச் சென்றவரை மரைன் போலீசார் பிடித்து மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொண்டி கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நேற்று மாலை அதிக வேகம் கொண்ட படகு சென்றதைப் பார்த்தனர். இலங்கை படகு போல் தெரிந்ததால் மரைன் போலீசுக்கு தெரிவித்தனர்.
தொண்டி மரைன் எஸ்.ஐ., கதிரவன், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் படகில் சென்று அந்தப் படகை பாசிபட்டினம் கடலில் மடக்கிப் பிடித்தனர்.
படகை செலுத்திய அதே கிராமத்தை சேர்ந்த அபுபக்கர் 35, என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறுகையில் 'வழக்கமாக 10 மைல் வேகத்தில் செல்லும் படகிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்தப் படகு 50 மைல் வேகத்தில் செல்லக் கூடியது. அனுமதி இல்லாமல் அதிவேகமாக சென்ற படகை பறிமுதல் செய்து மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றனர். தொண்டி மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.

