/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் 'செல்பி' மோகத்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து
/
தனுஷ்கோடியில் 'செல்பி' மோகத்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து
தனுஷ்கோடியில் 'செல்பி' மோகத்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து
தனுஷ்கோடியில் 'செல்பி' மோகத்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து
ADDED : ஏப் 11, 2024 01:57 AM

ராமேஸ்வரம்,:தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான 'செல்பி' எடுப்பதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மத்திய அரசு 2017ல் தனுஷ்கோடி- அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலை அமைத்தது. அன்று முதல் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றனர். அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவை ராட்சத கடல் அலையில் இருந்து பாதுகாக்க ரவுண்டானாவை சுற்றிலும் பெரிய பாறாங்கற்கள் குவிக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானாவின் 3 பகுதியிலும் கடல் நீர் அதிக நீரோட்டத்துடன் செல்வதால் 'இது ஆபத்தான கடல் பகுதி,' என அரசு அறிவித்து, இங்கு குளிக்க கூடாது என ராமேஸ்வரம் நகராட்சி எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.
இதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்து விளையாடியும், ரவுண்டானாவை சுற்றியுள்ள பாறாங்கற்கள் மீது ஏறி நின்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்கின்றனர். இதில் பாறாங்கல்லில் இடறி கடலில் விழுந்து விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

