/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செல்வமகள் திட்ட கணக்கு மார்ச் 1க்குள் துவக்க வேண்டும்
/
செல்வமகள் திட்ட கணக்கு மார்ச் 1க்குள் துவக்க வேண்டும்
செல்வமகள் திட்ட கணக்கு மார்ச் 1க்குள் துவக்க வேண்டும்
செல்வமகள் திட்ட கணக்கு மார்ச் 1க்குள் துவக்க வேண்டும்
ADDED : பிப் 27, 2025 12:44 AM
திருவாடானை; திருவாடானை, தொண்டி தபால் அலுவலகத்தில் மார்ச் 1 க்குள் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவாடானை தபால் அலுவலக அலுவலர்கள் கூறியதாவது:
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதில் 10 வயதிற்கு உட்டபட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் பெயரில் கணக்கு துவங்கலாம்.
குறைந்த பட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டு வட்டி அளிக்கப்படும்.
குழந்தைக்கு 18 வயது ஆனதும் கல்வி செலவுக்கு முதலீட்டில் இருந்து பாதி தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். 21 ஆண்டுகள் கழித்து முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் திருவாடானை, தொண்டி மற்றும் கிராமப் புற தபால் அலுவலகங்களில் மார்ச் 1 க்குள் கணக்கு துவங்கலாம்.
தாய் அல்லது தந்தையின் ஆதார் மற்றும் பான் கார்டு நகல், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அவசியம். இந்த வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.