/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பெரிய தொழிற்சாலைகள்அமைக்கப்படும்: பன்னீர்செல்வம் உறுதி
/
ராமநாதபுரத்தில் பெரிய தொழிற்சாலைகள்அமைக்கப்படும்: பன்னீர்செல்வம் உறுதி
ராமநாதபுரத்தில் பெரிய தொழிற்சாலைகள்அமைக்கப்படும்: பன்னீர்செல்வம் உறுதி
ராமநாதபுரத்தில் பெரிய தொழிற்சாலைகள்அமைக்கப்படும்: பன்னீர்செல்வம் உறுதி
UPDATED : ஏப் 16, 2024 06:58 AM
ADDED : ஏப் 16, 2024 04:04 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெரிய தொழிற்சாலைகள் அமைத்து தரப்படும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.
ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயககூட்டணியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று அவர் ராமநாதபுரம் அரண்மனை, சின்னகடை, கேணிக்கரை உள்ளிட்ட இடங்களில் நேற்று ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பன்னீர்செல்வம் பேசியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் போட்டியிடுகிறேன். பிரதமர் மோடியை உலக நாடுகள் தலைசிறந்த நிர்வாகி என பாராட்டுகின்றன. மாவட்டத்தில் 20 நாட்கள் சுற்றி வந்துள்ளேன் எல்லா இடத்திலும் குடிநீர் பிரச்னை உள்ளது.
சிறிய, பெரிய தொழிற்சாலைகள் இல்லாமல் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்கின்றனர். நான் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,ஆனால் ராமநாதபுரத்தில் பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எங்கெல்லாம் அதிக குடிநீர் ஆதராங்கள் உள்ளதோ அங்கிருந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படும்.
இதே போல ரோடு, கழிப்பறை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்றார். பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசன், அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* முன்னதாக முதுகுளத்துார் சட்டசபை தொகுதி கமுதி ஒன்றிய கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அபிராமம், கோட்டைமேடு, கமுதி, வெள்ளையாபுரம், செங்கற்படை, புதுக்கோட்டை, கோவிலாங்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது தனது பலாப்பழம் சின்னத்தை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முதல் ஓட்டுப்பதிவு நமக்கு தேவையில்லை. இரண்டாவது ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மேலிருந்து கீழ் ஆறாவது பட்டனில் எனது பெயர், போட்டோ, எனது சின்னம் பலாப்பழம் இருக்கும்.
அந்த பட்டனை அழுத்தி சவுண்ட் வந்தவுடன் திரும்பச் செல்லவும் என்று செல்லும் கிராமங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கமுதி ஒன்றிய கிராமங்களில் அத்தியாவசிய அடிப்படை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு, குறு தொழிற்சாலைகள் அமைக்கப்படும். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கொண்டுவரப்படும் என்றார்.

