/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாய்கடிக்கு தீர்வுகாண முதல்வருக்கு 3000 போஸ்ட் கார்டுகள் அனுப்புதல்
/
நாய்கடிக்கு தீர்வுகாண முதல்வருக்கு 3000 போஸ்ட் கார்டுகள் அனுப்புதல்
நாய்கடிக்கு தீர்வுகாண முதல்வருக்கு 3000 போஸ்ட் கார்டுகள் அனுப்புதல்
நாய்கடிக்கு தீர்வுகாண முதல்வருக்கு 3000 போஸ்ட் கார்டுகள் அனுப்புதல்
ADDED : மே 26, 2024 10:57 PM
கீழக்கரை : கீழக்கரையில் தெருநாய்க்கடியால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வுகாண வலியுறுத்தி மக்கள் முதல்வர் ஸ்டாலின் தனிப்பிரிவிற்கு 3000 போஸ்ட் கார்டுகளை அனுப்பியுள்ளனர்.
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், கால்நடைகளை தொடர்ந்து கடித்து காயப்படுத்துகின்றன.
இது சம்பந்தமாக பல்வேறு சமூக சமுதாய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்தாலும் மீண்டும் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வெறி நாய், சொறி பிடித்த நாய்களை நகராட்சி நிர்வாகத்தினர் முறையாக பிடித்து அகற்ற உத்தரவிடக்கோரி பொதுமக்கள் சார்பில் 3000 போஸ்ட் கார்டுகளை முதல்வர், தலைமைச் செயலகம், சென்னை என்ற முகவரிக்கு கோரிக்கை மனு எழுதப்பட்டது.
கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு பொறுப்பாளர் சதக் இலியாஸ், கவுன்சிலர் சேக்உசேன் உள்ளிட்ட ஏராளமான சமூக அலுவலர்கள் கீழக்கரை தபால் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை முகமது அஜிஹர், அபூபக்கர் சித்திக் ஆகியோர் செய்தனர்.

