தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வைக்கோல் படப்பிற்கு தீ வைப்பு

வைக்கோல் படப்பிற்கு தீ வைப்பு

வைக்கோல் படப்பிற்கு தீ வைப்பு


ADDED : ஜூலை 05, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அ.நெடுங்குளம் கிராமத்தில் அடையாளம் தெரியாதவர்கள் தீ வைத்ததால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு முழுவதும் எரிந்தது.

அ.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த சாத்தையா மாடுகள் வளர்த்து வருகிறார். தீவனத்திற்காக அப்பகுதியில் உள்ள வைக்கோல் கட்டுகளை சேகரித்து முனியப்பசாமி கோயில் அருகே படப்பு வைத்துள்ளார். இங்கு அடையாளம் தெரியாதவர்கள் சிலர் வைக்கோல் படப்பிற்கு தீ வைத்து சென்றனர். சாத்தையா அங்கு சென்று பார்த்த போது சேகரித்து வைக்கப்பட்டுள்ள வைக்கோல் முழுவதும் எரிந்து வீணாகியது.

முதுகுளத்துார் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் நஷ்டம் ஏற்படுள்ளது. அபிராமம் போலீசார் விசாரிக்கின்றனர். வருங்காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாத்தையா கூறினார்.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us