/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.பல லட்சம் மதிப்பு வைக்கோல் எரிந்தது
/
ரூ.பல லட்சம் மதிப்பு வைக்கோல் எரிந்தது
ADDED : ஜூலை 28, 2024 03:11 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடியில் ரூ.பல லட்சம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து வீணானது.
சத்திரக்குடியில் விவசாயிபெரியசாமி நிலத்தில் கேரளாவுக்கு கொண்டு செல்ல வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை அப்பகுதி சிறுவர்கள் தேனீக்கள் எடுப்பதற்காக தீ வைத்துள்ளனர். காற்றில் தீ பரவி வைக்கோல் கட்டுகளில் மதியம் 3:00 மணிக்கு பற்றியது.
தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி இயந்திரங்கள் மூலம் வைக்கோல்களை அப்புறப்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டு தீ போல் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் மற்றும் மீட்பு வீரர்கள் இரவு வரை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.