/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கோயில் அருகே கழிவு நீரால் சுகாதாரக்கேடு
/
உத்தரகோசமங்கை கோயில் அருகே கழிவு நீரால் சுகாதாரக்கேடு
உத்தரகோசமங்கை கோயில் அருகே கழிவு நீரால் சுகாதாரக்கேடு
உத்தரகோசமங்கை கோயில் அருகே கழிவு நீரால் சுகாதாரக்கேடு
ADDED : செப் 01, 2024 11:41 PM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ராஜகோபுரம் அருகே கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்குவதால் துர்நாற்றத்தினால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
உத்தரகோசமங்கை சிவன் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் யாத்திரீகர்கள் வசதிக்காக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முறையாக செப்டிக் டேங்க் கழிவு நீரை கடத்துவதற்கு வழியில்லாததால் தேங்கி குளம் போல் நிற்கிறது.
யாத்திரீகர்கள் கூறியதாவது: கழிப்பறை வளாகத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.
கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை உண்டாக்குகிறது. எனவே உத்தரகோசமங்கை ஊராட்சி நிர்வாகம் தேங்கும் கழிவு நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், சுற்றிலும் சுண்ணாம்பு மற்றும் ப்ளீச்சிங் பவுடர்கள் தெளித்து சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.