/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கி முன் கழிவுநீர் தேக்கம் ஆபத்தான பள்ளத்தால் அச்சம்
/
வங்கி முன் கழிவுநீர் தேக்கம் ஆபத்தான பள்ளத்தால் அச்சம்
வங்கி முன் கழிவுநீர் தேக்கம் ஆபத்தான பள்ளத்தால் அச்சம்
வங்கி முன் கழிவுநீர் தேக்கம் ஆபத்தான பள்ளத்தால் அச்சம்
ADDED : ஜூலை 13, 2024 04:24 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி முன்பு கால்வாயில் கழிவுநீர் குளம் போல் தேங்கி ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் கடலாடி ரோட்டில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செயல்படுகிறது.
இங்கு முதுகுளத்துார், கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் நகைக்கடன் பெற்று பயனடைகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி மறவர் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகளிளின் கழிவுநீர் செல்வதற்காக பல ஆண்டுகள் முன்பு சாலையோரத்தில் கால்வாய் அமைக்கப்பட்டது.
முதுகுளத்துார்--துாத்துக்குடி செல்லும் முக்கியமான ரோடு என்பதால் அவ்வப்போது ரோடு பராமரிப்பு பணி செய்யப்பட்டு உயர்ந்துள்ளது.
இதனால் கழிவுநீர் கால்வாய் தாழ்வாகவும் குழாய் துார்ந்துபோய் உள்ளது. தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி முன்பு கால்வாயில் கழிவு நீர் குளம் போல் தேங்கி பள்ளமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வங்கிக்கு வரும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
ரோட்டில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
எனவே கழிவுநீர் கால்வாயில் பெரிய குழாய் அமைத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.