நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் ரோட்டில்மக்கள் காத்திருந்து பயணம் செய்கின்றனர். பயணியர் நிழற்குடை 2010ம் ஆண்டு கட்டப்பட்டு உள்ளது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இருக்கைகள் முழுவதும் சேதமடைந்து விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறி வந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பயணியர் நிழற்குடை சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

